திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பள்ளியில் மாணவனுக்கு நூதன தண்டனை.. சிறுவன் மாரடைப்பால் மரணம்.!
பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களுக்கு ஆசிரியர் நூதன தண்டனை வழங்கியதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரலியில் பள்ளியில் ருத்ர நாராயண சேத்தி என்ற மாணவன் படித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் பள்ளியில் சக மாணவடன் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஆசிரியர் ருத்ர நாராயண சேத்தி மற்றும் அவருடன் விளையாடிய 4 மாணவர்களுக்கும், உட்கார்ந்து எழும் வகையிலான நூதன தண்டனையை வழங்கினார். அப்போது திடீரென மாணவன் ருத்ர நாராயண சேத்தி மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடையே சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி கல்வி அதிகாரி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.