மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இப்போ அதுமட்டும்தான் மேட்டரு குமாரு! புதுப்பேட்டை பட ஸ்டைலில் இயக்குனர் செல்வராகவன் கொடுத்த மாஸ் அட்வைஸ்!
நாடு முழுவதும் கொரோனோ வைரஸ் அசுர வேகத்தில் பரவி கோரதாண்டவமாடி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் பாதிப்புகள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் மக்கள் அடிக்கடி கை கழுவ வேண்டும், வெளியே செல்லும்போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என தொடர்ந்து பாதுகாப்பு அறிவுரைகளும் வழங்கப்படுகிறது. மேலும் பல திரைப்பிரபலங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவ்வப்போது வீடியோக்கள் மற்றும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இப்பல்லாம் உயிரோட இருக்கணும் குமாரு..அது மட்டும்தான் மேட்டரு !! #coronavirus#wearmask#SocialDistancing pic.twitter.com/2FwRx891Xx
— selvaraghavan (@selvaraghavan) August 30, 2020
இந்நிலையில் லாக்டவுன் காலங்களில் பிரபல இயக்குனரும், நடிகர் தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் இணையதளத்தில் செம ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தற்போது மாஸ்க் அணியவேண்டும் என கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தனது இயக்கத்தில் வெளிவந்த புதுபேட்டை படத்தில் கொக்கி குமாரு தனுஷ் மாஸ்க் அணிந்துருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, இப்பல்லாம் உயிரோட இருக்கணும் குமாரு..அது மட்டும்தான் மேட்டரு என பதிவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் புதுப்பேட்டை 2 குறித்த அப்டேட்டை கேட்டு வருகின்றனர்.