உயிர் உள்ளவரை நேசிப்போம்! குழந்தையின் புகைப்படத்துடன் பாவம் கணேசன் நடிகரின் மனைவி வெளியிட்ட உருக்கமான பதிவு!!
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ என்ற காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தனது அசத்தலான மிமிக்ரி திறமையால் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்தவர் நவீன். அதனை தொடர்ந்து பல நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
நவீனுக்கு மலேசியாவை சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்பவருடன் திருமணம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், அவருக்கு திருமணமாகிவிட்டதாக முதல் மனைவி திவ்யலட்சுமி கொடுத்த புகார் பரபரப்பைக் கிளப்பியது. மேலும் இந்த விவகாரம் காவல்துறை வரை சென்றது. ஆனால் நவீன் காதல் மட்டும்தான், நான் அவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என மறுத்ததாக கூறப்படுகிறது.
தற்போது நவீன், கிருஷ்ணகுமாரியுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கிருஷ்ணகுமாரி, 'எங்கள் திருமணத்திற்கு பின் பலரும் எங்களுக்கு சாபம் விட்டனர். குழந்தை பிறக்காது, நாங்கள் பிரிந்து விடுவோம்' எனக் கூறினர். அனைவருக்கும் ரொம்ப நன்றி. நான் தற்போது கர்ப்பமாக இருக்கிறேன் என எமோஷனலாக கூறியிருந்தார்.
இந்நிலையில் நவீன், கிருஷ்ணகுமாரி ஜோடிக்கு தற்போது அழகிய பெண்குழந்தை பிறந்துள்ளது. அந்த புகைப்படத்தை பகிர்ந்த நவீனின் மனைவி“நீ இந்த பூமிக்கு வருவது அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை செல்லமே, எங்களது இறுதி மூச்சு வரை உன்னை நேசிப்போம் என பதிவிட்டுள்ளார்.