மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை பகிர்ந்த சீரியல் நடிகை அனு... வைரலாகும் புகைப்படம்!!
தற்போது வெள்ளித்திரை நடிகர், நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நடிகர், நடிகைகள் பிரபலமடைந்து வருகின்றனர். சின்னத்திரையில் ஒரு சீரியலில் நடித்தாலே அவர்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகி விடுகிறது. இன்று பலரும் வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரையில் தான் நடிக்க ஆசைப்படுகிறார்கள்.
இவ்வாறு சின்னத்திரை சீரியலில் நடித்து பிரபலமானவர்களுள் ஒருவர் தான் நடிகை அனு. இவரின் வில்லத்தனமான நடிப்பு பலரையும் ரசிக்க வைத்துள்ளது. இவர் கடைசியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல சீரியலான பாண்டவர் இல்லம் தொடரில் நடித்திருந்தார்.
அனு, விக்னேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் பல வருடங்களுக்கு பின் கர்ப்பமான நிலையில் அண்மையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில் தற்போது அனு தனது குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து வான் வியன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார்.