மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்ளீஸ் திட்டாதீங்க.. பிரபல சீரியல் நடிகை ஜனனி வெளியிட்ட வேற லெவல் வீடியோ! வாயடைத்துப்போன ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை தொடரில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றவர் ஜனனி அசோக்குமார். அதனைத் தொடர்ந்து அவர் மௌனராகம், ஆயுத எழுத்து, மற்றும் தற்போது ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் ஹீரோவான மாயன் கதாபாத்திரத்திற்கு கோபக்கார தங்கச்சியாக நடித்து வருகிறார்.
மேலும் ஜனனி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரிலும் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின்னர் திடீரென அவர் அந்தத் தொடரிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் ஜனனி அவ்வப்போது தனது போட்டோசூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்வார்.
இந்த நிலையில் அவர் தற்போது பாடகியாக மாறியுள்ளார். அதாவது புன்னகை மன்னன் திரைப்படத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் சின்னகுயில் சித்ரா அவர்கள் பாடிய ஏதேதோ பாடலை தனது குரலில் பாடி அசத்தியுள்ளார். மேலும் அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ப்ளீஸ் திட்டாதிங்க என்று பதிவிட்டு வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரும் அருமையாக பாடியுள்ளீர்கள் என வாழ்த்தியுள்ளனர்.