சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
அட.. ரோஷினிதானா இது! வித்தியாசமான ஹேர்ஸ்டைலில், ஆள் அடையாளமே தெரியலையே! வைரலாகும் புகைப்படங்கள்!!
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி ஏராளமான சீரியல்கள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது. அவ்வாறு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. இதில் முன்னணி கதாநாயகியாக கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.
இந்த தொடரில் எதார்த்தமான இவரது நடிப்பு, எளிமையான லுக் மூலம் அவர் அனைவரது மனதிலும் நீங்கா இடம்பிடித்தார். இந்நிலையில் ரோஷினி ஒரு சில காரணங்களால் சில மாதங்களுக்கு முன்பு பாரதி கண்ணம்மா சீரியலிருந்து விலகினார். அவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
மேலும் ரோஷினி சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கக் கூடியவர். அவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான, மாடர்னான போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குதூகலப்படுத்துவார். அவர் தற்போது கருப்பு நிற டி ஷர்ட்டில், வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.
Will you be mine ❤️🙈 pic.twitter.com/r2UAJ2Bbne
— Roshni Haripriyan (@roshniharipriya) April 22, 2022