மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாந்தனு பாக்யராஜ் மிஸ் செய்த மூன்று மெகாஹிட் வெற்றிப்படங்கள்! எந்த எந்த படம் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், இயக்குனர் என பல திறமைகளை கொண்டவர் நடிகர் பாக்யராஜ். இவரது மகன் சாந்தனு பாக்யராஜும் தமிழ் சினிமாவில் ஹீரோவாகா அறிமுகமாகி ஒருசில படங்களில் நடித்துள்ளார். இவர் அறிமுகமான சக்கரக்கட்டி திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது.
ஆனால், அதன்பிறகு இவர் நடித்த எந்த படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை. தற்போது விஜய் நடித்துவரும் தளபதி 64 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் சாந்தனு பாக்கிராஜ்.
இந்நிலையில் மிக பெரிய வெற்றிப்படங்களில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தும், ஒருசில காரணங்களால் இவரால் அந்த படங்களில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். தற்போது அந்த படங்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது.
சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் சித்தார்த் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சாந்தனு பாகிராஜுக்குத்தான் வாய்ப்பு கிடைத்துள்ளது, அதேபோல், சங்கர் தயாரிப்பில் வெளியான காதல் படத்திலும் பரத்துக்கு பதில் இவருக்குத்தான் அந்த வாய்ப்பு முதலில் கிடைத்துள்ளது.
அதன்பிறகு, ஜெய், சசிகுமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற சுப்ரமணிய புறம் படத்தில் ஜெய் காதாபாத்திரத்தில் நடிக்க முதலில் இவரைத்தான் கேட்டுள்ள்னனர். ஆனால், ஒருசில காரணங்களால் இந்த மூன்று மெஹாஹிட் படங்களில் அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.