மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட தமிழ் பொண்ணு..நடிகை ஸ்ருதிஹாசனின் ஸ்டைலான மாஸ்க்கை பார்த்தீங்களா!! வேற லெவலில் தாறுமாறாக குவியும் லைக்ஸ்கள்!!
சினிமா துறையில் உலக நாயகனாக வலம் வரும் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். பின்னணி பாடகியாக இருந்த அவர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவரது முதல் படமே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டானது.
அதனை தொடர்ந்து அவர் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக உள்ளார். மேலும் தற்போது ஸ்ருதி ஹாசன் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலையாக தீவிரமாக பரவி வரும் நிலையில், முக கவசம் கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து பலவிதமான மாஸ்குகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஸ்ருதி செம ஸ்டைலாக மாஸ்க் அணிந்த புகைப்படத்தை சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த மாஸ்க்கில் தமிழ் பொண்ணு என பொறிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.