மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செம ஹேப்பியாக நன்றி கூறி நடிகர் சிம்பு வெளியிட்ட வீடியோ! ஏன்? கூட யாரெல்லாம் இருக்காங்க பார்த்தீர்களா.!
வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி கடந்த 25ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் மாநாடு. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக, ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடித்திருந்தனர்.
மாநாடு திரைப்படத்தில் அவர்களுடன் இணைந்து பிரேம் ஜி, டேனியல் போப், கருணாகரன், மனோஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மாநாடு திரைப்படம் வெளிவந்து விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூலையும் குவித்து வருகிறது.
Thank you for all the love ❤️ #Maanaadu #MaanaaduBlockbuster @vp_offl @kalyanipriyan @thisisysr @Premgiamaren @silvastunt @iam_SJSuryah @Cinemainmygenes @sureshkamatchi @vasukibhaskar pic.twitter.com/jmMAUTx0KY
— Silambarasan TR (@SilambarasanTR_) November 28, 2021
இந்நிலையில், இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாநாடு படக்குழுவினர் ஒன்றாக சேர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். அந்த வீடியோவில் சிம்பு, வெங்கட் பிரபு, கல்யாணி பிரியதர்ஷன், ப்ரேம்ஜி,ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் உள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.