பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நீண்ட நாட்களுக்கு பிறகு தனது காதலனை சந்தித்த சோனியா அகர்வால்.
செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானவர் சோனியா அகர்வால். அதன் பிறகு தம், கோவில், 7ஜி ரெயின்போ காலனி, மதுர, உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கும் இயக்குநர் செல்வராகவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னாளில் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். சிலகாலம் இருவரும் ஒற்றுமையாக குடும்பம் நடத்தினார்கள்.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் சோனியா அகர்வால் செல்வராகவன் ஜோடி விவகாரத்து செய்து கொண்டனர். விவாகரத்துக்குப் பின் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார் சோனியா அகர்வால்.
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்று '7ஜி ரெயின்போ காலனி. கடந்த 2004ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால் ஆகிய இருவரும் வித்தியாசமான காதலர்கள் கேரக்டர்களில் நடித்திருந்தனர். யுவன்ஷங்கர் ராஜாவின் அருமையான இசையில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்றிரவு ஒரு நிகழ்ச்சியில் ரவிகிருஷ்ணாவும் சோனியாவும் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது இருவரும் காதலர்களாக நடித்த படத்தினை நினைவு கொண்டு மகிழ்ந்ததாக சோனியா அகர்வால் தனது டுவிட்டரில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.