பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பிரபல முன்னணி நடிகையின் வீட்டை விலைக்கு வாங்கிய பரோட்டா சூரி! அதுவும் எத்தனை கோடிக்கு தெரியுமா?
இன்றைய தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் சூரி. பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் வந்த பரோட்டா காமெடி மூலம் தமிழ் சினிமாவில் பெருமளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து அவர் விஜய், சூர்யா, விஷால் என தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்கள் படத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். மேலும் இவர் இன்று புகழின் உச்சியில் இருந்து வருகிறார். ரசிகர்களிடையே தனி இடத்தை பெற்ற இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
மேலும் சூரி மதுரையில் அய்யன், அம்மன் என்ற ஹோட்டல்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் தற்பொழுது 90 கால கட்டங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான வெற்றி திரைபடங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்த நடிகை மீனாவின் வீட்டை வாங்கியுள்ளார்.
நடிகை மீனா சென்னையில் சாலிகிராமத்தில் முதன்முறையாக அழகிய வீடு ஒன்றை கட்டியிருந்தார். அந்த வீடு தற்போது விலைக்கு வந்தநிலையில் நடிகர் சூரி சுமார் 6.5 கோடி ரூபாய்க்கு அந்த வீட்டை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் மீனா வீட்டின் அருகே சூரியின் அலுவலகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.