ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. இப்பவும் செம யங்காக இருக்கும் நடிகை ஸ்ரீதேவிக்கு இவ்வளவு பெரிய மகளா!! வெளிநாட்டில் நடந்த கொண்டாட்டம்! வைரலாகும் புகைப்படங்கள்!!
திரையுலகில் ஏராளமான படங்களில் நடித்து நட்சத்திர ஜோடிகளாக விளங்கிய விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியர்களின் மகள்களில் ஒருவர் ஸ்ரீதேவி. இவர் சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ளார். அதனை தொடர்ந்து ஹீரோயினாக அவதாரம் எடுத்த அவர் நடிகர் ஜீவாவுடன் இணைந்து தித்திக்குதே என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
பின்னர் அவர் தேவதையை கண்டேன், பிரியமானவளே உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளார். நடிகை ஸ்ரீதேவி கடந்த 2009-ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ரூபிகா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் ஸ்ரீதேவி அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவி அண்மையில் சுவிட்சர்லாந்தில் தனது மகள் ரூபிகாவின் 6-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் இன்றும் சின்னப்பொண்ணு போல இருக்கும் நடிகை ஸ்ரீதேவிக்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.