#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னது வருத்தப்படாத வாலிபர் சங்கம் லதா பாண்டியா இது! வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்.
தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.
மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இவருக்கு ஏரளமான பட வாய்ப்புகள் வரத் துவங்கியது.
ஆனால் நடிகை ஸ்ரீதிவ்யா முதன் முதலில் தெலுங்கில் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஏராளமான தெலுங்கு சினிமாக்களிலும் நடித்துள்ளார். தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை தொடர்ந்து ஸ்ரீதிவ்யா ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, பென்சில்,பெங்களூரு நாட்கள்,மருது, காஷ்மோரா, மாவீரன் கிட்டு என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு அதிக பட வாய்ப்புகள் வராததால் சமூக வலைத்தளத்தில் மிகவும் பிஸியாக உள்ளார். தற்போது அழகான போட்டோஷுட் ஒன்றை நடத்தியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.