#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அசிங்கமாகிடும்.. பாபா பாஸ்கர், கனிக்கு இடையே வெடித்த மோதல்! அதுவும் எங்கு பார்த்தீர்களா! தீயாய் பரவும் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பேராதரவை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமாக சென்ற நிலையில் கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்தது. குக் வித் கோமாளி முதல் சீசனை விட 2வது சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.
இதில் போட்டியாளர்களாக பாபா பாஸ்கர், கனி, ஷகிலா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா, மதுரை முத்து, தீபா, ரித்திகா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கோமாளிகளாக ஷிவாங்கி, புகழ், மணிமேகலை, டிக்டாக் சக்தி, பாலா ஆகியோர் பெரும் ரகளைகள் செய்தன. இந்த நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் கனி முதலிடத்தையும், ஷகிலா இரண்டாவது இடத்தையும், அஸ்வின் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து அஷ்வின், கனி, பாபா பாஸ்கர், ஷிகிலா, வெங்கடேஷ் பட், மதுரை முத்து ஆகியோர் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். அப்பொழுது கனி பாபா பாஸ்கரை பார்த்து ரொம்ப அசிங்கமாகிடும் போங்க என கூற, பாபா பாஸ்கர் கோபத்துடன் என்ன அசிங்கமாகிடும். வார்த்தை ரொம்ப தப்பா இருக்கு என பேசுகிறார். இதற்கிடையில் மதுரை முத்து விடுங்க என சொல்ல, உடனே அவர் இருய்யா என கத்துகிறார். இந்த ப்ரோமோ வீடியோ வைரலாகி ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை கிளப்பியுள்ளது.