மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பாண்டவர் இல்லம்" சீரியல் நடிகைக்கு எளிய முறையில் வளைகாப்பு; குவியும் வாழ்த்துக்கள்., கொண்டாடும் ரசிகர்கள்.!
மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெறும் நிகழ்ச்சிகளில் சின்னத்திரைக்கு என தனி இடமே இருக்கும். சீரியல் என்று கூறினாலே தற்போது வரை பெரும்பாலானோருக்கும் சன் டிவி தான் ஞாபகம் வரும். புது புது நெடுந்தொடர்களை ஒளிபரப்பி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் சன் தொலைக்காட்சியில், கடந்த 2019 ஆம் ஆண்டு குடும்பம், காதல், நகைச்சுவை கொண்ட நெடுந்தொடராக ஒளிபரப்பப்பட்டது பாண்டவர் இல்லம்.
இந்த தொடரில் ரோஷினி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை அனு. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஆபீஸ் என்ற தொடர் மூலமாக சின்னதுறையில் அறிமுகமாகி, ஜீ தொலைக்காட்சியில் மெல்ல திறந்தது கதவு தொடரில் வில்லியாக நடித்து, பின்னர் பல சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் விக்னேஷ் என்றவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் திருமணத்திற்கு பின்னர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அணுவும் தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது கர்ப்பமாக இருப்பதாக அணு அறிவித்த நிலையில், பாண்டவர் இல்லத்தில் ரோஷினி கதாபாத்திரம் கர்ப்பமாக இருப்பதாகவும் காண்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் ஐந்து மாத கர்ப்பமாக இருக்கும், நிலையில் வீட்டிலேயே எளிய முறையில் வளைகாப்பு நடத்தி முடித்திருக்கிறார். இதுகுறித்த போட்டோவை அணு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.