மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பயத்தில் படப்பிடிப்பை பாதியில் நிறுத்திய சூர்யா 44 படக்குழு.. இது தான் காரணமா?
கங்குவா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். பான் இந்தியா திரைப்படமாக உருவாக்கியுள்ள, இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 10 மொழிகளில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
சூர்யா 44
இந்த இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமும், கார்த்திக் சுப்புராஜ் ஸ்டோன் பென்ஞ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
இதையும் படிங்க: காபி கேட் இயக்குனரை கைவிட்ட பாலிவுட்.?! கோலிவுட்டுக்கே திரும்பிய சோகம்.!
இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சமீபத்தில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோவை படக்குழு வெளியிட்டுருந்தது.
பாதியில் திரும்பிய படக்குழு
இந்த நிலையில் சூர்யா 44 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமான் தீவுகளில் நடைபெற்று வந்த நிலையில், திடீரென பாதியில் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். அதற்கு காரணம் படப்பிடிப்பு நடத்தப்பட்ட இடங்களில் பாம்புகள் அதிகமாக இருந்ததால் படக்குழுவினர் பயந்து, பயந்து படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.
இதற்காக சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகும், பாம்புகள் மீதான அச்சம் இருந்தால், பாதுகாப்பு நலன் கருதி முன் கூட்டியே படிப்பினை முடித்துவிட்டு படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். மேலும், மீதமுள்ள காட்சிகளை ஊட்டியில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "அடி மேல் அடி.." ட்ராப் ஆகிறதா சூர்யா 44.? வெளியான அதிர்ச்சி தகவல்.!!