மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போடுங்கடா வெடிய... எடுத்து வைங்க 1,000 கோடிய.!! வெளியான கங்குவா விமர்சனம்.!!
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கங்குவா. இதிகாச மற்றும் நவீனத்துடன் தொடர்புடைய இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தத் திரைப்படத்தை பார்த்த பாடல் ஆசிரியர் விவேகா வெகுவாக பாராட்டி செய்தி வெளியிட்டு இருப்பது இந்தத் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
கங்குவா
திரைப்படம் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்க சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கங்குவா. 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் பிரீ ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். 10 மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது.
ப்ரீ ரிலீஸ் சேல்ஸ்
மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாகி இருந்தாலும் ப்ரீ ரிலீஸ் சேல்ஸ் 500 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்து இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. தியேட்டர் விநியோகம், வெளிநாட்டு ரைட்ஸ் மற்றும் ஓடிடி ரைட்ஸ் என இந்தத் திரைப்படத்தின் பிசினஸ் நன்றாக இருப்பதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபகாலமாக நடிகர் சூர்யாவின் திரைப்படங்கள் தியேட்டரில் பெரிய பிசினஸ் ஆகாத நிலையில் கங்குவாவின் வருகைக்காக தமிழ் சினிமா காத்திருக்கிறது.
இதையும் படிங்க: தோழிகளுடன் அலப்பறை செய்யும் ராஷ்மிகா மந்தானா.! வைரலாகும் புகைப்படம்.!?
புகழ்ந்து தள்ளிய பாடல் ஆசிரியர் விவேகா
இந்தத் திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்தத் திரைப்படத்தை பார்த்த பாடல் ஆசிரியர் விவேகா வெகுவாக பாராட்டி இருக்கிறார். இந்தத் திரைப்படத்தை பார்த்து மெய்சிலிர்த்ததாக குறிப்பிட்ட அவர் இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக டைரக்டர் சிவா அறியப்படுவார் எனவும் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் கங்குவா திரைப்படம் 1,000 கோடி ரூபாய் என்ற இலக்கை நிச்சயமாக முறியடிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: நடிகைகளோடு நெருக்கம் காட்டும் விஜய் சேதுபதி.? உண்மையை வெளிப்படுத்திய பிரபலம்.!?