மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகத்திலும் பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்க வேண்டும்.! தமிழக உள்துறை செயலாளருக்கு பறந்த கடிதம்.! என்ன காரணம்.?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஷான் டாம் சாக்கோ, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து படம் வெளியாவதற்கான பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 13ம் தேதி வெளியாகவுள்ளது. ஆனால் பீஸ்ட் படத்தை குவைத்தில் மட்டும் திரையிட தடை விதித்துள்ளது. அதாவது பீஸ்ட் படம் பணயக்கைதிகள் அடிப்படையிலான திரில்லர் படமாக உருவாகி உள்ளது. குவைத்தின் நலன்களுக்கு எதிரான இஸ்லாமிய பயங்கரவாதத்தின் காட்சிகளை பீஸ்ட் காட்டுவதால் படத்திற்கு தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லீம் லீக் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு முஸ்லீம் லீக் தலைவர் முஸ்தபா தமிழக உள்துறை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், பீஸ்ட் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து இருப்பதாக கூறி குவைத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் வரும் 13ம் தேதி பீஸ்ட் திரைப்படத்தை வெளியிட்டால் அசாதாரண சூழல் ஏற்படும். இதனால் அப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.