கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
அடேங்கப்பா.. கெத்து காட்டும் தி லெஜண்ட் படம்! தமிழகத்தில் மட்டும் இவ்வளவு வசூலா.! வெளிவந்த தகவல்!!
தமிழகம் முழுவதும் பல கிளைகளுடன் பிரமாண்டமாக இயங்கிவரும் சரவணன் ஸ்டார்ஸ் கடையின் உரிமையாளர் சரவணன் அருள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தி லெஜண்ட். இந்த படத்தின் மூலம் அவர் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். தி லெஜெண்ட் படத்தை ஜெடி மற்றும் ஜெர்ரி இயக்கியுள்ளனர்.
இதில் ஹீரோயினாக, சரவணன் அருள்க்கு ஜோடியாக ஊர்வசி ராவ்டேலா நடித்துள்ளார். மேலும் அவர்களுடன் விவேக், யோகி பாபு, பிரபு, நாசர், கோவை சரளா ,ரோபோ சங்கர், மயில்சாமி உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இது விவேக் நடித்த கடைசி படம் ஆகும்.
பல கிண்டல், கேலிகளுக்கு இடையே ஜூலை 28 ஆம் தேதி வெளிவந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. ஆனால் வசூலில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதாவது தி லெஜண்ட் திரைப்படம் வெளியாகி இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூ.10 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.