சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு! கண்டதுண்டா! வைரலாகும் VJ சித்ராவின் லேட்டஸ்ட் புகைப்படம்!



vijay-tv-mullai-vj-chithra-latest-instagram-photos

சேலை கட்டி மங்களகரமாக இருக்கும் நடிகை சித்ராவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

பல்வேறு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணிபுரிந்து தற்போது பிரபல சீரியல் நடிகையாக இருப்பவர் VJ சித்ரா. தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற காதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார். இவருக்காவே அந்த தொடரை பார்க்கும் ரசிகர்கள் ஏராளம் என்றே கூறலாம்.

VJ Chithra

அந்த அளவிற்கு சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் சித்ரா. தற்போது 28 வயதாகும் இவர் விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளார். இவரது நிச்சயதார்த்த புகைப்படங்கள்கூட சில சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலானது.

தற்போது இவர் சேலை அணிந்து மிகவும் மங்களகரமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.

View this post on Instagram

❤️😍❤️

A post shared by Chithu Vj (@chithuvj) on