மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவர் தானா.! ஆச்சயர்த்தில் ரசிகர்கள்.!?
பிரியங்கா சோப்ராவின் திரைப்பயணம்
இந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் பிரியங்கா சோப்ரா. 2002 ஆம் வருடம் உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா, முதன் முதலில் தமிழில் விஜய் கதாநாயகனாக நடித்த 'தமிழன்' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவரின் முதல் படமே தமிழில் மிக பெரும் வெற்றியடைந்தது. ஆனால் இதன் பிறகு தமிழில் வேறு எந்த திரைப்படங்களிலும் பிரியங்கா சோப்ரா நடிக்கவில்லை.
பாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா
இதனை அடுத்து ஹிந்தியில் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த பிரியங்கா சோப்ரா, பர்பி, பாஜிராவ் மஸ்தானி, தில் தடக்னே தோ, போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து தொடர் வெற்றி படங்களை அளித்தார். இவ்வாறு பாலிவுட்டில் பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வந்த பிரியங்கா சோப்ரா நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இதையும் படிங்க: "எல்லாவற்றையும் சோசியல் மீடியாவில் போடுவேன்" பிக் பாஸ் ரச்சிதாவை மிரட்டும் இயக்குனர்.!? என்ன நடந்தது.!?
இதன்பிறகு பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். தற்போது தனது நடிப்பு திறமையின் மூலம் ஹாலிவுட் திரைப்படங்களிலும் கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. போர்ப்ஸ் இதழ் அறிக்கையின் படி பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் திரைப்படங்களில் 40 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகை
இது போன்ற நிலையில் பிரியங்கா சோப்ரா தான் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்று இணையத்தில் செய்திகள் வைரலாகி வருகிறது. இவரின் சம்பளம் ஹிந்தியில் ஒரு படத்தில் நடிப்பதற்காக ஒரு கோடி வரை வாங்கி வருகிறார். பாலிவுட்டிலே அதிக சம்பளம் பெறும் நடிகையாக பிரியங்கா சோப்ராவும், இரண்டாவது இடத்தில் தீபிகா படுகோனேவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பட வாய்ப்புக்காக பிக்பாஸ் பூர்ணிமா ரவி செய்த செயல்.? திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!?