சிறகடிக்க ஆசை.. சர்ச்சை நாயகிக்கு, ஹீரோயின் வாய்ப்பு.. ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சுருதி நாராயணன்.!
தனி ஒருவன் 2வில் கதாநாயகி யார் தெரியுமா.? வெளியான பரபரப்பு தகவல்.!

கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று 'தனி ஒருவன்' படம் வெளியானது. இன்று அதன் 8ஆவது ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு, தனி ஒருவன்-2 பற்றிய அறிவிப்பை தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.
ஜெயம், சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி, தனி ஒருவன், எம்.குமரன் சன் ஆப் மஹாலட்சுமி போன்ற வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, 7ஆவது முறையாக 'தனி ஒருவன் 2' படத்திற்காக 'ஜெயம்' சகோதரர்கள் இணைகின்றனர்.
சகோதரர்கள் ராஜா, ரவி இருவருக்கும் 'ஜெயம்' திரைப்படம் தான் அறிமுகப்படமாக அமைந்தது. தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்துவரும் சகோதரர்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பைக் கிளறியுள்ளது.
சர்வதேச தரத்தில் இப்படம் உருவாகப் போவதாக தெரிய வந்துள்ளது. விரைவில் தயாரிப்பு நிறுவனம் அதிகார பூர்வமாக படம் குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று தெரிய வந்துள்ளது. ஏ ஜி எஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தான் தனி ஓருவன் 2 படத்தை தயாரிக்க உள்ளது. மேலும் தனி ஒருவன் இரண்டாம் பாகத்திலும் நயன்தாரா தான் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது