மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யோகிபாபுவின் போட் திரைப்படம் ஓடிடி ரிலீஸ்; விபரம் உள்ளே.!
மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ், சிம்பு என்டேர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் போட். யோகிபாபுவின் நடிப்பில், திரில்லர், அரசியல் காமெடி கொண்ட திரைப்படமாக போட் உருவாகி இருந்தது.
இப்படத்தில் கௌரி கிசான், எம்.எஸ். பாஸ்கர், சின்னி ஜெயந்த், ரமேஷ் திலக் உட்பட பலரும் நடித்து இருந்தனர். கடந்த ஆகஸ்ட் 2 அன்று திரையரங்கில் வெளியான படம், நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டாம் உலகப்போரின் போது எடுக்கப்பட்ட காட்சிகள், பலரையும் கவர்ந்தது.
An unique Entertaining Political Satire & Survival Thriller, @iyogibabu & Director @chimbu_deven's #Boat will be streaming from today (Oct 1st) on @PrimeVideoIN ! #BoatNowOnPrime #Boat
— Ramesh Bala (@rameshlaus) October 1, 2024
🔗https://t.co/oRoLFukwKx pic.twitter.com/IQ8pPaogxa
இதையும் படிங்க: பழனி பஞ்சாமிருதம் குறித்து அவதூறு; இயக்குனர் மோகன் ஜி-க்கு ஜாமின்; நிபந்தனையை ஆப்படித்த நீதிமன்றம் அதிரடி.!
இந்நிலையில், போட் திரைப்படம் இன்று முதல் அமேசான் ஓடிடி தலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு திரையரங்கில் கிடைத்த ஆதரவைபோல, ஒவ்வொரு வீடுகளிலும் ஆதரவு அளிக்க வேண்டும் என ரசிகர்களுக்கு அன்பு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரசிகர்மன்ற பொதுச்செயலாளருக்கு பிறந்த குழந்தை; பெயர் சூட்டி மகிழ்ந்த விஜய் சேதுபதி.!