மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ஃபைட் கிளப் என்று வைத்ததற்கு பதில் கஞ்சா கிளப் என்று பெயர் வைத்திருக்கலாம்" சர்ச்சையை கிளப்பிய ப்ளூ சட்டை மாறன்..
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், போன்ற திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வருகிறார். மேலும் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இப்படத்திற்கு பின்பு ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'தலைவர் 171' திரைப்படத்தை இயக்குகிறார்.
இது போன்ற நிலையில் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருந்தார். இந்த நிறுவனத்தின் முதல் படமாக உரியடி விஜயகுமார் நடித்த ஃபைட் கிளப் எனும் திரைப்படம் நேற்று வெளியானது.
இப்படத்தை ரிவ்யூ செய்த யூ ட்யூப்பரான ப்ளூ சட்டை மாறன், படத்தை பங்கமாக கலாய்த்து உள்ளார். அவர் கூறினார், "பைட் கிளப் என்று பெயர் வைத்ததற்கு பதில் கஞ்சா கிளப் என்று பெயர் வைத்திருக்கலாம். படம் முழுவதும் புகைப்படமாக தான் இருக்கிறது. கதாநாயகியின் கதாபாத்திரம் நன்றாக இருந்தது. ஆனால் 25 நிமிடங்களுக்கு மேல் கதாநாயகி காணாம போய்ட்டாங்க" என்று கூறியிருக்கிறார்.