#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆந்திரா மற்றும் ஒரிசாவில் தாக்க தயாராகும் புயல்!! தமிழகத்திற்கு பாதிப்பு வருமா?
இன்னும் ஆறு மணி நேரத்தில் ஒரிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் புயல் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இதனைப் பற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் புயல் எச்சரிக்கை பிரிவின் அதிகாரி சாஸ்திரி "வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது மெதுவாக வடமேற்கு பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இது இன்னும் ஆறு மணி நேரத்தில் புயலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த புயலானது இன்று வியாழக்கிழமை ஆந்திரபிரதேசம் மற்றும் ஒடிசாவில் கரையைக் கடக்கும்.
மேலும் பேசிய அவர் இது ஆந்திரா மற்றும் ஒரிசா பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். இந்த புயலானது தெற்கு ஒரிசா மற்றும் வடக்கு ஆந்திர பிரதேசத்திற்கு இடையிலுள்ள கலிங்கப்பட்டி மற்றும் பூரி இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் கரையை கடக்கும்போது 60 கிலோ மீட்டர் முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரிசா மற்றும் ஆந்திர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும். இதனைத் தொடர்ந்து ஒரிசாவின் அனைத்து துறைமுகங்களிலும் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரிசா மற்றும் ஆந்திரா கரையோரங்களில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த புயலானது ஆந்திரா மற்றும் ஒரிசா இடையே கரையைக் கடப்பதால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று தெரிகிறது.