#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடடே.. இதய ஆரோக்கியத்தில் இருந்து சரும பாதுகாப்பு வரை.! பாதாமின் மருத்துவ குணங்கள்.!
பாதாம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதால் தினமும் பாதாம் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் மூளை ஆரோக்கியமாக இருப்பதோடு, ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சனைகளையும் நீக்குகிறது. இது தவிர தினமும் பாதாம் சாப்பிட்டு வந்தால் முகத்தில் பொலிவு மற்றும் கூந்தலும் அழகாக இருக்கும்.
ஆனால், ஊறவைத்த பாதாம் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் நார்ச்சத்து, வைட்டமின் ஈ, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பாஸ்பரஸ், புரதம் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தினமும் 10 ஊறவைத்த பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இன்று பார்க்கலாம்.
எடை இழப்புக்கு உதவியாக இருக்கும். கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது. சருமத்தில் பொலிவு வரும். முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கண்களுக்கு நல்லது. இவற்றில் இருக்கும் ஒமேகா-3 இதை ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இவை உடலில் நல்ல கொழுப்புகளை உற்பத்தி செய்வதன் மூலம் கெட்ட கொழுப்புகள் உடலில் சேர்வதை தடுக்கிறது. இதனால் ரத்தக்குழாய் அடைப்பு உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படாமல் ஆரோக்கியம் பேணப்படுகிறது.