ஒருத்தனுக்கு ஒருத்தினு சொல்றாங்க, எய்ட்ஸில் ஏன் முன்னணி இடம்? இயக்குனர் டிஜே ஞானவேல்.!
#ஆரோக்கியம்: சிறுநீரகப்பை கிருமிகளை விரட்டியடிக்கும் அதிமதுரத்தேநீர்..!

அதிமதுரத்தை போட்டு ஊறவைக்கப்பட்ட தண்ணீரை அடிக்கடி குடித்து வந்தால் சிறுநீரகப்பையில் உள்ள கிருமிகள் நீங்கி, புண்கள் ஆறிவிடும். மேலும், அதில் இருக்கும் கற்களை நீக்கவும் உதவும்.
தேவையான பொருட்கள் :
தண்ணீர் - 1 டம்ளர்
அதிமதுரம் தூள் - 1 டீஸ்பூன்
நாட்டு சர்க்கரை - தேவைக்கு
செய்முறை:
தண்ணீரை எடுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி பின் நன்றாக கொதிக்கவிடவும்.
பின், கொதித்த நீரில் அதிமதுரத்தூளை கொட்டி 2 நிமிடங்கள் நன்றாக கொதி வரும் வரை காத்திருக்கவும்.
பின்னர், தேவையான அளவு நாட்டு சர்க்கரையை அதில் கொட்டி கரைந்தவுடன் இறக்கி வடிகட்டி குடித்தால் தொண்டை வலி, சளி மற்றும் புண்கள் குணமாகும்.