காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
உஷார்.. பதப்படுத்தப்பட்ட உணவுகளை விரும்பி சாப்பிடுவிங்களா?.. அப்போ இந்த பக்கவிளைவுகளும் கட்டாயம் வரும்..!!
தற்போதைய காலகட்டத்தில் காய்கறிகளில் இருந்து இறைச்சி வரை அனைத்துமே பதப்படுத்திதான் பயன்படுத்தி வருகிறோம். சமைக்காத உணவுகள் மட்டுமல்லாமல் ரெடி டூ ஈட் என சூடு செய்தால்மட்டும் போதும் என அப்படியே சாப்பிடும்படியும் கிடைக்கிறது.
இந்த உணவுகள் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்க, அவற்றில் அதிக அதிகளவில் பதப்படுத்தும் காரணிகள் சேர்க்கப்படுகிறது. இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அவற்றை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் எந்தெந்த மாதிரியான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று தற்போது காணலாம்.
இதயத்திற்கு நல்லதல்ல :
பதப்படுத்தப்பட்ட உணவில் ட்ரான்ஸ்கொழுப்புகள் அதிகமாக இருக்கிறது. இது தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தி இதய நோய்களுக்கு வழி இருக்கிறது. மேலும் உடலில் உள்ள நல்ல கொழுப்புகளின் அளவை கெடுத்து கேடு விளைவுககும் கொழுப்புகளையும் அதிகரிக்கிறது.
உடல் எடையை கூட்டும் :
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகள் அதிகளவில் இருப்பதால் கொழுப்புச்சத்து அதிகளவில் உண்டாகும். மேலும் வறுத்தஉணவுகள் மற்றும் நொறுக்குத்தீனிகளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
சர்க்கரை அளவை அதிகரிக்கும் :
பதப்படுத்தப்பட்ட உணவுகள் நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அவற்றில் ஸ்டார்ச் சேர்க்கப்படுகிறது. ஸ்டார்ச்சுகள் சர்க்கரையாக உடைக்கப்பட்டு ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.
உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது :
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம் அதிகளவில் இருக்கிறது. இதனால் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். ரத்த அழுத்தம் அதிகமாகும் போது பக்கவாதம் மற்றும் நாள்பட்ட பிரச்சனைகளுக்கு அடித்தளமாகிறது.