இனி வாழை பூவை வேண்டாம் என கூறாதீர்கள்..!! முக்கியமாக பெண்களுக்கு.!!



Health Benefits of Banana flower

வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால், ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்தம் வேகமாகச் செல்லும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், வயிற்றுப்புண்கள் ஆறும். 

வாழைப் பூவிற்கு மலச்சிக்கலைப் போக்கும் தன்மையுள்ளது. சீதபேதியையும் கட்டுப்படுத்தும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள், மாதவிலக்கு காலங்களில் அதிக ரத்தப்போக்கு அல்லது ரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் மாதவிடாய் பிரச்னைகள் விரைவில் குணமாகும்.

உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் வாழைப்பூவை சமைத்து சாப்பிடலாம். இதில் கொழுப்பு சத்து வளமான அளவில் இருப்பதால் இது ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.