தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ரத்த சோகையை குணப்படுத்தும் அற்புதக் கீரை.!! அரைக்கீரையின் நன்மைகள்.!!
கீரை வகைகள் இயற்கை மனித குலத்திற்கு வழங்கிய அருட்கொடை என்றே சொல்லலாம். அனைத்து வகை கீரைகளிலும் மனிதர்களுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. குறிப்பாக அரைக்கீரை மனிதனின் உடல் நலத்தை பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றில் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. அரைக்கீரையின் பயன்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
அரை கீரையில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள்
இந்தக் கீரையில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து இருக்கிறது. அரைக் கீரையை வைட்டமின்களின் பிறப்பிடம் என்றே கூறலாம். இந்தக் கீரையில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே நிறைந்து இருக்கிறது. மேலும் இந்தக் கீரையில் இரும்பு சத்து, மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் சத்துக்களும் நிறைந்து இருக்கின்றன. இந்தக் கீரை பல ஆன்டி ஆக்சிடென்ட்களையும் கொண்டிருக்கிறது.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
அரைக் கீரையை உணவில் எடுத்துக் கொள்வதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இந்தக் கீரையில் நிறைந்திருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின் சி ஆகியவை உடலின் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கிறது. உடலுக்கு நோய்களை எதிர்த்துப் போராடும் வலிமையை வழங்குகிறது.
இதையும் படிங்க: கண் பார்வை குறைபாடா.? கவலை வேண்டாம்... இந்த ஒரு பானம் போதும்.!! சூப்பரான டிப்ஸ்.!!
ரத்த சோகைக்கு சிறந்த மருந்து
அரைக்கீரை ரத்த சோகைக்கு சிறந்த மருந்தாகும். இந்தக் கீரையானது இரும்புச்சத்தை அதிகம் கொண்டிருக்கிறது. இவை நம் உடலின் ரத்த உற்பத்தியிலும் ஹீமோகுளோபின் உற்பத்தியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தக் கீரையை சாப்பிட்டு வர ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை ஏற்படாமல் உடலை பாதுகாக்கிறது. ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கீரையை உணவில் எடுத்துக் கொண்டால் ரத்த சோகை நீங்கும்.
எலும்புகள் மற்றும் கண் ஆரோக்கியத்தில் அரை கீரையின் பங்கு
அரைக்கீரையில் நிறைந்திருக்கும் வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்துக்கள் நம் எலும்புகளை வலுப்படுத்துவதோடு எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சியிலும் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இந்தக் கீரையில் இருக்கும் வைட்டமின் ஏ கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்தக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர கண் பார்வை குறைபாடு நீங்கும்
இதையும் படிங்க: அடடே... குப்பை மேனியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா.? ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள்.!!