"சின்னப்பசங்கள" கூட விட்டுவைக்காத ஃகிட்னி பெயிலியர்.! உஷார்.. உடனே கவனியுங்கள்.!



kidney-disease-symptoms-in-tamil

டயாலிசிஸ் செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு :

முன்னொரு காலத்தில் வயதானவர்களை மட்டும் ஆட்டுவித்து வந்த சிறுநீரக செயலிழப்பு நோய், சமீப காலமாக சிறு வயது நபர்களை கூட பாதித்து அவர்களின் உயிரை பறிக்கும் காட்சிகளை நாம் கண்டு கொண்டு இருக்கிறோம். இப்போதெல்லாம், கிட்னி பெயிலியர் பிரச்சனைக்காக டயாலிசிஸ் செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் அவர்கள் வயது மிகவும் குறைவாக இருப்பது தான் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயமாக இருக்கிறது. 

உடலில் இருக்கும் தேவையில்லா கழிவுகளை வெளியேற்றி சிறுநீரகம் சரிவர செயல்படாமல் இருந்து விட்டால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். சிறுநீரக ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு சிறுநீர்ப்பை வீக்கம், சிறுநீரக கல், சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். 

kidney

வாழ்க்கைமுறை சிக்கல்கள் :

ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கத்தால் சிறுநீரகப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றது. ஒருவேளை உங்களுக்கு கீழ்காணும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிறுநீரக மருத்துவரை அணுகுவது நல்லது. 

அறிகுறிகள் :

கிட்னி பிரச்சனை இருப்பவர்களுக்கு குமட்டல் உணர்வு, வாந்தி உள்ளிட்டவை அடிக்கடி ஏற்படும். தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட்டால் அது சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கலாம். உங்கள் சிறுநீரில் அதிக நுரை, அதிக துர்நாற்றம், வியர்வையில் மோசமான நாற்றம் உள்ளிட்டதை ஏற்பட்டால் அது சிறுநீரக தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறியாகவும், அல்லது சிறுநீரக செயலிழப்பின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம். 

kidney

உடல் வீக்கம், பசியின்மை :

சரியாக பசிக்கவில்லை என்றால் சிறுநீரக நோய் ஏற்பட்டிருக்கலாம். உடலில் அடிக்கடி அரிப்பு எரிச்சல் உள்ளிட்டவை ஏற்படும். முதுகு வலி, கை, கால்கள் வீக்கம், முக வீக்கம், அடி வயிற்றில் சுரிர் என்ற வலி உள்ளிடவை சிறுநீரக தொற்றுக்கான அறிகுறி. திடீரென உடல் சோர்வடைதல், உடலில் அங்கங்கே நிறமாற்ற தேமல்கள் போன்ற நிலை, அதிகப்படியான எடை இழப்பு உள்ளிடவை சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள் ஆகும்.

வருமுன் காப்போம்

சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க முக்கியமாக நாம் அதிக தண்ணீர் அருந்த வேண்டியது அவசியம். மேலும், நீர்ச்சத்து அதிகம் இருக்கும் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை சாப்பிடுவதும் அடிக்கடி பழச்சாறுகளை உட்கொள்வதும் அவசியம்.