#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தும்மல் தொல்லை தாங்க முடியவில்லையா?.. அப்போ இது உங்களுக்குத்தான்..! குணமடைய ஈஸி டிப்ஸ் இதோ..!!
தற்போதைய காலகட்டத்தில் அனைவருக்கும் விரைவில் சளிபிடித்துவிடுகிறது. தும்மல் பிரச்சனைகளும் உள்ளது. அதனை சரிசெய்ய சிம்பிளான டிப்ஸ் குறித்து தற்போது காணலாம்.
சிலருக்கு சளி மற்றும் தூசி போன்றவற்றால் தும்மல் வரும். காலை எழுந்தவுடன் அல்லது குளிர்காற்று படும் பொழுதும், மாலை நேரத்திலோ தும்மல் வரும். தும்மல் வருவதற்காக பல காரணங்கள் இருந்தாலும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்போது ஒருவரை சோர்வடையசெய்யும்.
மேலும் மூக்கு ஒழுகுதல், அரிப்பு, கண்களில் நீர் வடிதல், தலைவலி, நெரிசல் மற்றும் தீவிரசோர்வு போன்ற பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும். ஒவ்வாமை ஏற்படுவதை தவிர்ப்பதன் மூலம் தும்மல் வருவதையும் தடுக்க இயலும். சில சமயம் வீட்டில் உள்ள மருந்துபொருட்களையும் பயன்படுத்தலாம்.
இஞ்சி சாறு மற்றும் தேன் :
உணவில் இஞ்சி அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மஞ்சள் சேர்த்து உண்பதும் நல்லது. இது மூச்சுதிணறல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாகும். ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து குடிக்க தும்மல் மற்றும் சளி பிரச்சினைகள் விரைவில் குறையும்.
மஞ்சள் பால் :
சளிபிரச்சனைக்கு பாலில் மஞ்சள் கலந்து குடிப்பது சிறந்த மருந்தாகும். மஞ்சளில் அழற்சிக்கான எதிர்ப்புப்பொருள், ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்திருக்கிறது. இதனால் தான் காயங்கள் ஏற்படும் போது மஞ்சள் வைத்தால் எளிதில் குணமாகிறது. மஞ்சள் கலந்த பால் குடிப்பது சளியில் இருந்து விடுபட உதவுகிறது.
சிட்ரஸ் பழங்கள் :
இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க சிட்ரஸ் பழங்கள் உதவுகிறது. ஸ்ட்ராபெரி, எலுமிச்சை, பெரிய நெல்லிக்காய் மற்றும் ஆரஞ்சு போன்றவை சிறந்தது. இந்த உணவுகள் தும்மலை கட்டுப்படுத்தி மூச்சுபிரச்சனைகளுக்கு பற்றி தீர்வாக அமையும்.
ஆவி பிடித்தல் :
மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் ஆவிபிடித்தல் மற்றொரு சிறந்த தீர்வு. அதீத சளி பிரச்சனைக்கும் ஆவிபிடித்தல் தீர்வு கொடுக்கும். நீரில் தைலம் அல்லது நீராவி மாத்திரை சேர்த்து தலையை துண்டால் மூடி ஆவிபிடிக்க தும்மல் உள்ளிட்ட அனைத்து சளிபிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு கிடைக்கும்.