திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடக்கடவுளே.. 4 மாத குழந்தையை கடித்துக்கொன்ற தெரு நாய்கள்: தொட்டிலில் தூங்கிய குழந்தைக்கு நேர்ந்த சோகம்.!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், சாகிபேட் பகுதியைச் சார்ந்தவர் தனது மனைவி மற்றும் மகனுடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். கணவன் - மனைவி இருவரும் கூலி தொழிலாளர்கள் ஆவார்கள்.
தம்பதிகளுக்கு குழந்தை பிறந்து நான்கு மாதம் ஆகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் பச்சிளம் குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்து தாய் வெளியே வேலை செய்துள்ளார்.
அப்போது அங்கு வந்த மூன்று தெருநாய்கள் சிறுவனின் முகம் மற்றும் உடலில் கடித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுவனை மீட்ட குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.