மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரயிலில் அறிமுகமான பெண்... சிகிச்சை அளிப்பதாக கூறி... போலி டாக்டர் செய்த அதிர்ச்சி சம்பவம்.!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ரயிலில் அறிமுகமான பெண்ணை அறுவை சிகிச்சை நிபுணர் எனக்கூறி லாட்ஜுக்கு அழைத்து சென்று அவரிடம் ஆசை வார்த்தைகளை கூறி நகைகளை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த போலி டாக்டரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலத்தைச் சார்ந்த வெங்கடேஸ்வரலு என்ற நபர் தனக்கு ரயில் பயணத்தின் போது அறிமுகமான பெண்ணிடம் மிம்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக இருப்பதாக கூறி தன்னை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அப்போது அந்தப் பெண் தனக்கு இருக்கும் உடலும் போதைகளை பற்றி விளக்கியுள்ளார்.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த போலி டாக்டர் ரயில்வே நிலையத்திற்கு அருகில் இருக்கும் விடுதி ஒன்றுக்கு அந்த பெண்ணை சிகிச்சை அளிப்பதாக கூறி அழைத்துச் சென்றிருக்கிறார். சிகிச்சையின் போது மயக்க மருந்து கொடுத்து அந்தப் பெண் மயங்கியதும் அவருடைய நகைகளை திருடிவிட்டு தப்பி ஓடி இருக்கிறார்.
மயக்கம் தெளிந்த பின் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண் அழுது புலம்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் கோபாலபுரம் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் அந்த விடுதி மற்றும் ரயில்வே நிலையத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.