#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கணவனின் வரதட்சணை கொடுமையால் மனைவி மரணம்.! இன்று நீ, நாளை என் மகள்!! நடிகர் ஜெயராம்
கேரளாவில் இளம்பெண் ஒருவர் வரதட்சணைக் கொடுமையால் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஸ்மயா என்ற இளம்பெண்ணிற்கும், கிரண்குமார் என்பவருக்கும் இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது, 100 பவுன் நகை, சொகுசு கார், நிலம் உள்ளிட்ட வரதட்சணையை பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுத்துள்ளனர்.
திருமணத்திற்குப் பின்னர் கிரண்குமார் தனக்குக் கொடுக்கப்பட்ட காரின் மைலேஜ் சரியில்லை எனக் கூறி அதற்குப் பதிலாக பணமாகக் கொடுக்குமாறு கேட்டு மனைவியை அடித்துத் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை விஸ்மாயா, கணவர் வீட்டில் உள்ள குளியலறையில் தூக்கில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வரதட்சணை கொடுமையால் இளம் பெண் மரணமடைந்த சம்பவத்திற்கு நடிகர் ஜெயராம் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவரது முகநூல் பக்கத்தில், "இன்று நீ, நாளை என் மகள்" என குறிப்பிட்டு உள்ளார்.