#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி யாருக்கு?.. ஜோதிடர் சொன்ன முக்கிய தகவல்.!
எதிர்வரும் 2024 பாராளுமன்ற தேர்தல் மற்றும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் என்ன மாதிரியான அரசியல் மாற்றங்கள் நிகழப்போகிறது? என்பது தமிழக மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விஷயங்களில் ஒன்றாக தற்போது மாறியுள்ளது.
அதனை உறுதி செய்யும் பொருட்டு அரசியல் ரீதியான பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், தற்போதைய பாராளுமன்ற தேர்தல் அமைய உள்ளது. இந்நிலையில் பிரபல ஜோதிடர் ராமாஜி எதிர்வரும் 2024 பாராளுமன்ற தேர்தல் குறித்து தெரிவிக்கையில், "இந்திய கூட்டணியின் சார்பில் மம்தா பானர்ஜி முன்னிலைப்படுத்தப்பட்டால் மோடி கட்டாயம் தோல்வியை சந்திப்பார்.
மம்தா பானர்ஜி முன்னிலைப்படுத்தப்படாத பட்சத்தில், மீண்டும் மோடியின் ஆட்சியே இந்தியாவில் நடக்கும். அதே போல 2026 மக்களவை தேர்தலில் மீண்டும் திமுகவே ஆட்சிக்கட்டிலில் அமரும்.
அதே சமயத்தில் அதிமுக தனது செல்வாக்கை இழக்கும். யாரும் எதிர்பார்க்காத வகையில், நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய எதிர்க்கட்சியாக உருவாகும். அதிமுகவை விட அதற்கு அதிக பலம் சேர்ந்திருக்கும்" என்று தெரிவித்தார்.