மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல தனியார் ஹோட்டலில் விபச்சாரம்.. யூடியூபர், சமூக ஆர்வலர் உட்பட 15 க்கும் மேற்பட்டோர் கைது.! 2 சிறுமிகள் மீட்பு.!!
பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தின் போத்கயா நகரில் உள்ள நமோ புத்தா ஹோட்டலில் பாலியல் தொழில் நடப்பதாகவும், வாடிக்கையாளர்கள் 15 க்கும் மேற்பட்டோர் வந்துள்ள நிலையில், பெண்களுடன் அவர்கள் உல்லாசமாக இருப்பதாகவும் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ஹோட்டலில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனனையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள், அதனை நடத்தியவர், ஹோட்டல் மேலாளர் என 15 குற்றவாளிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து அலைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட விபச்சார புரோக்கரின் அலைபேசியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் எண்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், சம்பந்தப்பட்ட ஹோட்டலில் விபசாரத்தை ஏற்பாடு செய்ய உதவியாக இருந்ததாக சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ள நபர்களும் இருந்துள்ளனர். அவர்கள் தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது.
கொல்கத்தாவில் இருந்து கயாவுக்கு பெண்களை ஒப்பந்த அடிப்படையில் அழைத்து வந்த புரோக்கர், அவர்களை வைத்து விபச்சாரம் செய்து வந்துள்ளார். மேலும், ஹோட்டலில் 2 சிறுமிகளும் மீட்கப்பட்டுள்ளார். வாடிக்கையாளரிடம் பெண்களுடன் உல்லாசமாக இருக்க தலா ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது.
யூடியூப் செய்தி சேனல் பத்திரிகையாளர், தனியார் காப்பீடு நிறுவன மேலாளர், சமூக சேவகர் போன்று பலரும் விபச்சார தொழில் நடைபெற உறுதுணையாக இருந்ததும் அம்பலமானது. இவ்வழக்கில் தொடர்புடைய ராஜா குமார், சுபம் குமார், அப்துல் கலாம், ஆதித்ய குமார், கிருஷ்ண குமார் பாண்டே, சுபம் குமார், ராஜா சா, ஆனந்த் குமார், குல்ஷன் குமார், அவினாஷ் குமார், அமர் குமார், ஆயுஷ்மான் திலக், பிரசாந்த் ஆனந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.