"2026 க்குள் நக்ஸல்களை ஒழித்துவிடுவோம்" - பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழப்பால், உள்துறை அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை.!.



Central Minister Amit Shah Warning on Naxals 


சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜப்பூர் பகுதியில், பாதுகாப்பு பணிக்கு சென்றுவிட்டு, மீண்டும் முகாமுக்கு திரும்பிய பாதுகாப்புப்படை வீரர்களுக்கு எதிராக நக்சல்கள் பயங்கரவாத தாக்குதலை முன்னெடுத்தனர். ஐஇடி வெடிகுண்டை வெடிக்க வைத்ததில், இராணுவ வாகனம் உருக்குலைந்து, அதில் பயணம் செய்த 9 வீரர்கள் உயிரிழந்தனர். 

9 பேர் வீரமரணம்

உயிரிழந்த வீரர்களின் உடல் சிதறியபடி மீட்டு வைக்கப்பட்ட காணொளி காண்போரை பதறவைத்தது. குற்று வனப்பகுதி வழியாக பாதுகாப்பு படையினர் திரும்பி வரும்போது, இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இந்த தாக்குதலில் தலைமை காவலர்கள் புத்ராம் கோர்ஸா, காவலர்கள் துர்மா மார்க்கம், பான்று ராம் போயம், பாமன் சோடி, சோமடு வெட்டி, சுதர்சன் வெட்டி, சூபர்னாத் யாத்வ்ம், ஹரிஷ் கோரம், ஓட்டுநர் துளேஸ்வர் ராணா ஆகியோர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. 

இதையும் படிங்க: செய்தியாளர் கொடூரமாக அடித்துக்கொலை; செப்டிக் டேங்கில் மீட்கப்பட்ட சடலம்.!

அமித் ஷா உறுதி

இந்நிலையில், சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்ததற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2026ம் ஆண்டுக்குள் ஒட்டுமொத்தமாக நக்சல்கள் இந்தியாவில் இருந்து ஒழிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். இதன் வாயிலாக வரும் நாட்களில் அதிரடியாக நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் நேரலையில் பெண் தற்கொலை; பதறியடித்து வீட்டுக்கு செல்வதற்குள் பிரிந்த உயிர்.!