பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கேரளாவில் அதிர்ச்சி.. பணம் கிடைக்க பச்சிளம் குழந்தையை நரபலி கொடுத்த கொடூரம்!
கேரளா மாநிலம் இடுக்கி பகுதி சேர்ந்த விஷ்ணு மற்றும் அவரது நண்பர் நிதிஷ் ஆகிய இருவரும் சேர்ந்து பணம் மற்றும் தங்கம் கிடைக்கும் என நம்பி பச்சிளம் குழந்தையை நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதற்காக விஷ்ணுவின் சகோதரியின் குழந்தையை அவர்கள் தேர்வு செய்துள்ளனர். இதுகுறித்து விஷ்ணுவின் பெற்றோர் மற்றும் சகோதரிகள் கேட்டபோது, இது தகாத உறவில் பிறந்த குழந்தை என்பதால் இதற்கு சம்மதித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் இருவரும் காட்டுப் பகுதியில் பச்சிளம் குழந்தையை குழந்தையை கொலை செய்து புதைத்துள்ளனர். அதன் பின்னர் அப்பகுதியை காலி செய்துவிட்டு வேறு ஒரு பகுதிக்கு சென்றுள்ளனர். இதனிடையே விஷ்ணு மற்றும் அவரது தந்தைக்கும் இடையே ஏற்பட்ட தகராறு விஷ்ணுவும், நித்திஷும் சேர்ந்து அவரை கொலை செய்துள்ளனர்.
இந்த நிலையில் திருட்டு வழக்கில் கைதான இருவரும் இந்த தகவலை போலீசில் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் புதைக்கப்பட்ட 2 உடல்களின் எலும்பு கூடுகளை கைப்பற்றிய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.