வாழும்போது மட்டுமல்ல, சாவிலும் ஹீரோவான இளைஞன்! வெளியான நெஞ்சை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!



Dead Youngman donate organs to 8 people

கேரளா, கொட்டரக்காரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனுஜித். 27 வயது நிறைந்த இவர் கொரோனாவால் வேலையிழந்த நிலையில், ஜூலை 17ஆம் தேதி புதிதாக வேலை தேடி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்பொழுது திடீர் விபத்தில் சிக்கிய அவர்  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில்  மூளைச்சாவு அடைந்தார்.

இதனால் குடும்பமே பெரும் சோகத்தில் மூழ்கியது. மேலும் இந்த நிலையிலும் அனுஜித்தின் பெற்றோர்கள் அவரது உடல் உறுப்புகளை தானம் கொடுக்க முன்வந்தனர். அதனைத்தொடர்ந்து,  ஹெலிகாப்டர் மூலம் அனுஜித்தின்  உடல் உறுப்புகள் கொச்சினுக்கு கொண்டுவரப்பட்டு 8 பேருக்கு பொருத்தபட்டு மறுவாழ்வு கொடுக்கபட்டுள்ளது.

organ donate

மேலும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அனுஜித் தொழில்துறை பயிற்சி நிறுவனமொன்றில், படித்துக்கொண்டிருந்தபோது,
கொட்டக்கரை அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை கண்டுள்ளார். இந்நிலையில் தனது உயிரையும் பொருட்படுத்தாத அவர் சிவப்பு நிற பையை தூக்கிக்கொண்டு தண்டவாளத்தில் ஓடி ரயிலை நிறுத்தினார். இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்கள் காப்பாற்றப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த  சம்பவத்தையும் நினைவுகூர்ந்த  பலரும், அன்று 100க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றியவர் இன்று  8 உயிர்களில் வாழ்கிறார் என  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.