மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
துப்பாக்கியால் சுட்டு, பைக்கில் பறந்த மர்மநபர்கள்..2 பேர் படுகாயம்.!டெல்லியில் பதற்றம்.!
நேற்றிரவு வெள்ளை நிற காரை நோக்கி, மூன்று பேர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள சுபாஷ் நகர் பகுதியில் நேற்றிரவு காரில் வந்தவர்களை, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் பத்து ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்றுள்ளனர்.
ஆனால், அவர்கள் சரமாரியாக சுட்டதில் துப்பாக்கி குண்டுகள் வேறு இடத்திற்கு சென்ற நிலையில், காரில் வந்தவர்கள் காயத்துடன் உயிர் தப்பினர். பின் இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிய வர அங்கு தற்போது போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.மேலும், இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இருவரையும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த நிலையில், அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவியுள்ளது.