மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வழக்கறிஞர் வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட பணியாளர்... காவல்துறை விசாரணையில் திடுக்கிடும் திட்டம் அம்பலம்.!
டெல்லி உச்ச நீதிமன்ற வழக்கறிஞரின் வீட்டில் அவரது பணிப்பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அவரிடம் பணிபுரிந்த வேலையால் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருப்பவர் அமித் சிங் . கடந்த செவ்வாய்க்கிழமை இவரது வீட்டில் பணிபுரிந்து வந்த கமல் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. இது தொடர்பாக தீவிரமாக காவல்துறையினர் விசாரணை செய்து வந்தனர்.
அவரது இரண்டு கைகளும் பின்னால் கட்டப்பட்டு மெத்தை இயல் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறை இந்த சம்பவம் தொடர்பாக வழக்கறிஞரின் வீட்டில் வேலை செய்த நபர் மற்றும் இன்னொரு நபரை கைது செய்து இருக்கிறது.
கைது செய்யப்பட்ட நபர் வழக்கறிஞர் வீட்டில் இன்னொரு நபருடன் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாகவும் அதனைப் பற்றி வீட்டுப் பணியாளரான கமல் அறிந்து கொண்டதால் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.