#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தஞ்சையில் கொடூரம்... விபரீதத்தில் முடிந்த தகாத உறவு.!! தாயின் கள்ளக்காதலனை அடித்தே கொன்ற மகன்கள்.!!
தாயுடன் கள்ள தொடர்பில் இருந்த நபரை அவரது 2 மகன்கள் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட ராஜா
தஞ்சாவூர் மாவட்டம் மனோரா அருகே உள்ள கருவேலங்காட்டில் ரத்த காயங்களுடன் இளைஞர் ஒருவர் உயிருக்கு போராடுவதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் காயமடைந்த நபரை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இதனைத் தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்து காவல் துறை நடத்திய விசாரணையில் இறந்த நபர் மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜா என்று தெரியவந்தது.
காவல்துறை விசாரணையில் வெளியான உண்மை
இதனைத் தொடர்ந்து காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. அப்போது சரபேந்திரராஜன்பட்டினத்தை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ்(22) அவனது தம்பியான 17 வயது சிறுவன் மற்றும் குமார்(51) ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக ராஜாவின் தாய் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் 3 பேரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். மேலும் கொலைக்கான காரணத்தையும் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அடப்பாவமே... 5 மாத குழந்தையை அடித்தே கொன்ற தந்தை.!! விசாரணையில் வெளிவந்த உண்மை.!!
முக்கோண கள்ளக்காதல்
மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த செல்வம் மற்றும் அபூர்வம் தம்பதியினருக்கு விக்னேஷ் என்ற விக்கி மற்றும் 17 வயது சிறுவன் என 2 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக செல்வம் பிரிந்த நிலையில் அபூர்வம் தனியாக வசித்து வந்துள்ளார். அவரது மூத்த மகனான விக்னேஷ் திருமணம் ஆகி மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். இளைய மகனான 17 வயது சிறுவன் அங்குள்ள இறால் பண்ணை ஒன்றில் தங்கியிருந்து வேலை செய்து வந்தான். இந்நிலையில் அபூர்வத்திற்கு குமார் மற்றும் ராஜா ஆகியோருடன் கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. அபூர்வம் குமாருடனான பழக்கத்தை குறைத்துக் கொண்டு ராஜாவுடன் நெருக்கத்தை அதிகரித்து இருக்கிறார். இதனால் குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டிருக்கிறது.
கொலை நடந்தது எப்படி
தன்னுடன் நெருக்கத்தை குறைத்துக் கொண்ட அபூர்வத்தை பழிவாங்க நினைத்த குமார் சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்துள்ளார். இந்நிலையில் ராஜா மற்றும் அபூர்வம் ஆகியோர் தனிமையில் உல்லாசமாக இருப்பதை அறிந்த அவர் அபூர்வத்தின் மகன்கள் விக்னேஷ் மற்றும் அவரது தம்பியை அழைத்து வந்து தாய் ராஜாவுடன் நெருக்கமாக இருப்பதை காட்டி இருக்கிறார். இதனைக் கண்டு ஆத்திரமடைந்த விக்னேஷ் மற்றும் அவனது தம்பி ஆகியோர் இரும்புக் கம்பியை எடுத்து கள்ளக்காதலன் ராஜாவை கடுமையாக தாக்கி இருக்கின்றனர். இதில் படுகாயம் அடைந்த ராஜாவை மோட்டார் சைக்கிளில் வைத்து மனோரா பகுதி கருவேலங்காட்டில் வீசி சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட கொலையாளிகள்
காவல்துறை விசாரணையில் சிக்கிய குற்றவாளிகள் 3 பேரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் நடைபெற்ற இந்த கொலை அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: திருச்சி: மத்திய சிறை ஊழியர் திடீர் மரணம்.!! காவல்துறை கண்ணீர் அஞ்சலி.!!