#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஏன் இந்த மிருகத்தனம்! தனது காதலனின் அக்கா குழந்தையை வாஷிங்மெஷினில் போட்டு கொன்ற இளம்பெண்! வெளிவந்த பகீர் காரணம்!
பஞ்சாப் மாநிலம் கபூர்தலா என்ற மாவட்டத்தை சேர்ந்தவர் மன்ப்ரீத் கவுர். இவர் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த இளைஞனுக்கு வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளது. மேலும் அதனைத் தொடர்ந்து அந்த இளைஞன் மன்பிரீத் கவுரிடம் பேசுவதை நிறுத்தியு
ள்ளார். திருமணம் டிசம்பர் 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அந்த இளைஞனின் அக்கா சுனிதா தனது இரு வயது குழந்தை ஆதிராஜ் மற்றும் அதன் 4வயது சகோதரனுடன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் ஆதிராஜ் அவரது அண்ணன் மற்றும் பக்கத்து வீட்டு குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளது. ஆனால் சிறிது நேரத்தில் மற்ற குழந்தைகள் வீடு திரும்பிய நிலையில் ஆதிராஜ் மற்றும் வீட்டிற்கு வரவில்லை. இதனை தொடர்ந்து அவர்கள் அப்பகுதி முழுவதும் தேடியுள்ளனர். பின்னர் குழந்தை கிடைக்காததால் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில் அவர்கள் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்துள்ளனர்.
அப்பொழுது குழந்தை ஆதிராஜு மற்ற குழந்தைகளுடன் மன்ப்ரீத் கவுர் வீட்டிற்கு விளையாட சென்றுள்ளது. ஆனால் சிறிது நேரத்தில் இரு குழந்தைகள் மட்டும் வீடு திரும்பிய நிலையில் ஆதிராஜ் வீட்டிலிருந்து வெளியே வரவில்லை. இதனை தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில் தனது காதலனின் திருமணத்தை நிறுத்த அவர் குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக வாஷிங்மெஷினில் இருந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இரண்டு வயது குழந்தையை கொடூரமாக கொன்ற மன்பிரீட் கவூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.