#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிப்.24-ஆம் தேதிஒரு கோடி விவசாயிகளுக்கு ரூ.2000! புதிய திட்டத்தை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
2019-20 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் நாடு முழுவதும் 2 ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 சிறப்பு உதவி நிதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 12 கோடி விவசாயிகள் பயன்பெறுபர்.
இந்த நிதியானது தகுதியான விவசாயிகளுக்கு ரூ.2000 வீதம் ஆண்டிற்கு 3 முறை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும் கூறப்பட்டது. இதற்கான ரூ.75000 கோடியை மத்திய அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா என்ற திட்டத்தின் பெயரில் ஒதுக்கியுள்ளது.
விவசாயிகளுக்கு பயனுள்ள இந்த திட்டத்தினை பாரதப் பிரதமர் மோடி முதல்முறையாக வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி உத்திரப் பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் துவங்கி வைக்கவுள்ளார். அன்றைய தினம் மட்டும் ஒரு கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2000 நிதி செலுத்தப்படும். மீதமுள்ள விவசாயிகளுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வழங்கப்படும்.
இதற்கான பணிகள் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் துவங்கப்பட்டுள்ளது. முதல்கட்ட நடவடிக்கையாக விவசாயிகளின் நிலங்கள் பற்றிய விவரங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.