மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நட்பாக பழகிய மனைவி.. தவறான கண்ணோட்டம் கொண்ட கணவனால் பெண்ணுக்கும் - இளைஞனுக்கும் திருமணம்.. கண்ணீரில் கதறிய சோகம்.!
மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகித்து, பொது இடத்தில் மற்றொரு வாலிபருடன் கல்யாண சடங்குகள் செய்த கணவன் மற்றும் அவரது உறவினர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திரிபுரா மாநிலத்தில் உள்ள கோவாய் மாவட்டம், மத்திய கிருஷ்ணாபூரில் 30 வயதுடைய ஒரு பெண் தனது கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண் அடிக்கடி யாரோ ஒருவருடன் செல்போனில் பேசி வந்த நிலையில், இதனைக் கண்ட கணவர் ஒருவேளை பேசிக்கொண்டிருப்பது கள்ளகாதலாக இருக்குமோ? என்று சந்தேகமடைந்துள்ளார்.
இதனால் தனது மனைவியை பொது இடத்திற்கு அழைத்துச்சென்று, தனது உறவினர்கள் 15 பேருடன் சேர்ந்து அந்த பெண்ணை கொடுமைப்படுத்தியுள்ளார். அதாவது அந்த பெண் கள்ளதொடர்பு கொண்டதாக கூறப்பட்ட வாலிபரை பொது இடத்திற்கு அழைத்து வந்து கணவர், நீ என் மனைவியோடு கள்ளதொடர்பில் இருந்ததால் இப்பொழுதே திருமணம் செய்து மனைவியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், சுற்றியிருந்த அனைவரும் கோபமுடன் இருந்ததால், என்ன செய்வதென்று தெரியாமல் அந்த வாலிபரும், பெண்ணுக்கு தாலிகட்டி பொட்டு வைத்துள்ளார். ஆனால் மனைவியோ இதற்கு எவ்வித சம்மதமும் இல்லாமல் அழுது கொண்டிருந்த நிலையில், அவரை பொது இடத்திலேயே கடுமையாக வைத்து கணவன் மற்றும் அவரது உறவினர்கள் தாக்கியுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி காவல் துறையினருக்கு இது குறித்து தெரிய வந்தது. இதனால் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற காவல்துறையினர் கணவர் மற்றும் அவரது உறவினர்களை கைது செய்துள்ளனர்.