கடனை அடைக்க மூடியதால் ஆத்திரம்; கடன் கொடுத்தவரின் மகளை கடத்திக்கொன்ற பெண்.! பதறவைக்கும் துயரம்.!



in Andhra Pradesh Chittoor Baby Killed 

 

ரூ.3.5 இலட்சம் கடனுக்காக 6 வயது சிறுமி கடனை பெற்ற பெண்ணால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டம், புங்கனூர் உபயதுல்லா கிராமத்தில் வசித்து வருபவர் அதுன் துலா. இவரின் மனைவி சானியா. தம்பதிகள் இருவருக்கும் அஸ்வியா என்ற 6 வயதுடைய மகள் இருக்கிறார். 

இதையும் படிங்க: அசடுவழியும் ஆண்களே டார்கெட்.. நிர்வாண படமெடுத்து பணம்பறித்த 27 வயது பெண் கைது.! 

கடந்த அக்.1ம் தேதி வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்த சிறுமி அஸ்வியா மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காத காரணத்தால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

சடலமாக மீட்கப்பட்ட சிறுமி

இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர். மேலும், மாயமான சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில், 3 நாட்களுக்கு பின்னர், அதே பகுதியில் இருக்கும் கால்வாயில் அஸ்வியா சடலமாக மீட்கப்பட்டார்.

Andhra Pradesh

முதற்கட்ட விசாரணையில் சிறுமி கொலை செய்யப்பட்ட பின்னர் உடல் கால்வாயில் வீசப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது. இதனால் சிறுமியை யார்? எதற்காக கொலை செய்திருப்பார்கள்? என விசாரணை நடந்தது. 

கடனை திரும்ப கேட்டதால் கொலை

இந்நிலையில், அஸ்வியாவின் தந்தையிடம் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடன் வாங்கி இருக்கிறார். கடனை திரும்பச் செலுத்தக்கூறி அசன் கோரிக்கை வைத்துள்ளார். இதனால் பெண் ஆத்திரமடைந்து, தனது உறவினர்களுடன் சேர்ந்து வீட்டின் வெளியே விளயாடிக்கொண்டு ருந்த சிறுமியை கொலை செய்தது அம்பலமானது.

பின் காவல்துறையினரிடம் சிக்காமல் இருக்க சிறுமியின் உடலை கால்வாயில் வீசிவிட்டு வந்துள்ளது. விசாரணையின் முடிவில் உண்மையை தெரிந்துகொண்ட அதிகாரிகள், 2 பெண்கள் உட்பட 3 பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.

ஒருபக்கம் கடன் நெருக்கடியால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளும் நபர்கள் இருக்கின்றனர். மற்றொருபுறம் வாங்கிய கடனை கேட்டதால், கடன் கொடுத்தவர் அல்லது அவர்களின் குடும்ப உறுப்பினரை கொலை செய்யும் நபர்களும் இருக்கின்றனர். 

இதையும் படிங்க: பேருந்து - லாரி மோதி பயங்கர விபத்து; 8 பேர் பலி., 30 பேர் படுகாயம்.!