டெல்லியைத் தொடர்ந்து பீகார் மாநிலத்திலும் நிலநடுக்கம்; மக்கள் பீதி.!



in Bihar Earthquake after Delhi Today 

 

இந்தியாவின் தலைநகர் டெல்லியில், இன்று அதிகாலை 4.2 புள்ளிகள் அளவில் மிதமான நல்லடக்கம் ஏற்பட்டது. இதனால் நள்ளிரவு நேரத்தில் பீதியடைந்த மக்கள், கட்டிடங்களிலிருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். 

மேலும், கட்டிடங்களும் லேசான ஆட்டம் கண்டதால், மக்கள் பெரும் பதற்றத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில், டெல்லியைத் தொடர்ந்து பீகார் மாநிலத்திலும் காலை 8 மணி நிலவரப்படி நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதையும் படிங்க: எமனை நேரில் பார்த்து வந்த இளைஞர்கள்; அலட்சியத்தால் சக்கரத்தில் சிக்கியும் காத்திருந்த அதிஷ்டம்.!

டெல்லி, பீகாரில் நிலநடுக்கம்

ஏற்கனவே இந்திய நிலப்பரப்பு பகுதிகளில் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்க அச்சுறுத்தல் வரும் காலங்களில் இருக்கும் என துருக்கியில் ஏற்பட்ட மிகப்பெரிய அழிவுக்கு பின்னர் அறிவிக்கப்பட்டது. 

அதனை உறுதி செய்யும்பொருட்டு தற்போது டெல்லி மற்றும் பிகார் மாநிலங்களில் ஆங்காங்கே நடுக்கம் உணரப்பட்டது மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்துள்ளது. பீகாரில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4 புள்ளிகள் அளவில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: 65 வயதுடைய மூதாட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை; சிகரெட் கொடுக்க மறுத்ததால் அதிர்ச்சி செயல்.!