மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தேர்வில் தோல்வியுற்றதால் சோகம்; 7 வது மாடியில் இருந்து சிறுமி கீழே குதித்து தற்கொலை.!
டெல்லியில் ஜெஇஇ தேர்வுக்கு தயாராகி வந்த 17 வயது சிறுமி, தேர்வில் தேர்ச்சி பெற வில்லை என்பதால் மனமுடைந்து தற்கொலை செய்வதாக உயிரை மாய்த்துக்கொண்ட துயரம் நடந்துள்ளது. சிறுமி 7 வது மாடியில் இருந்து கீழே குதித்ததால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. டெல்லியில் உள்ள ஜாமியா நகர் பகுதியில் இந்த துயரம் நடந்துள்ளது. உயிரிழந்த மாணவி 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். அங்குள்ள ஷாஷீன் பாக் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: அதிவேகத்தில் சோகம்; 4 சிறார்கள் உட்பட 7 பேர் பரிதாப பலி.. சாலையோர மரத்தில் கார் மோதி பயங்கரம்.!
தேர்வில் தோல்வியால் சோகம்;
இவர் ஜெஇஇ நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், அவர் தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். அவரின் தற்கொலை கடிதத்தில், "என்னை மன்னியுங்கள், என்னால் முடியாது, ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற இயலவில்லை" என தெரிவித்துள்ளார்.
சிறுமியின் தற்கொலை குறித்து தகவல் அறிந்த ஜாமியா காவல் துறையினர், அவரின் உடல் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுமியின் தாயிடம் மகள் ஏற்கனவே தன்னால் படிக்க இயலவில்லை என கூறி இருக்கின்றனர். எனினும், இந்த விஷயம் குறித்து விசாரணை தொடருகிறது.
दिल्ली के जामिया नगर इलाके में नाबालिग लड़की ने सुसाइड किया
— Lavely Bakshi (@lavelybakshi) October 26, 2024
नाबालिग ने बिल्डिंग से कूदकर आत्महत्या की
बताया जा रहा है JE के एग्जाम में फेल होने से परेशान थी pic.twitter.com/s9IVinHj0y
இதையும் படிங்க: கார் - இருசக்கர வாகனம் மோதிய நொடியில் பயங்கர வெடிவிபத்து; அதிவேகம், அலட்சியத்தால் 3 உயிர்கள் பலி.!