53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
கார் - இருசக்கர வாகனம் மோதிய நொடியில் பயங்கர வெடிவிபத்து; அதிவேகம், அலட்சியத்தால் 3 உயிர்கள் பலி.!
சாலை விதிகளை கடைபிடித்து, பொறுமையாக சாலையில் பயணம் செய்தால் நமது இலக்கை நோக்கி சென்றடையலாம். மாறாக அதிவேகத்தில் பயணத்தினால், ஒருநாள் இல்லையேல் ஒருநாள் கட்டாயம் விபத்தில் சிக்கி உயிர் இழப்பு ஏற்படும்.
அதிவேகத்தில் பயணம்
மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தா, கூச் பெகர் பகுதியை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் குழு இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டது. இவர்கள் அதிவேகத்தில் சாலையில் சென்று கொண்டு இருந்தனர்.
இதையும் படிங்க: டியூசன் சென்ற 9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... 18 வயது இளைஞர் கைது.!!
அச்சமயம், கூச் பெகர் சாலை சந்திப்பில், பொலிரோ கார் ஒன்று சாலையின் வலப்புறம் செல்ல முயன்றது. அதே சாலையில் எதிர்திசையில் இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் குழு அதிவேகத்தில் வந்தது.
நெஞ்சை பதறவைக்கும் வீடியோ
Tf🤯😳
— Ghar Ke Kalesh (@gharkekalesh) October 13, 2024
pic.twitter.com/faWNsf6ugl
கார் ஓட்டுநர் உடனடியாக சாலையை கடக்க முயற்சித்தார். இருவரின் அலட்சியம் காரணமாக, இருசக்கர வாகன ஓட்டி, அதிவேகத்துடன் வந்து காரின் பக்கவாட்டு பகுதியில் மோதினார். இந்த விபத்தில் இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து வெடித்தது.
ஈந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த இருவர், இருசக்கர வாகன ஓட்டி என 3 பேர் நிகழ்விடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அக்.11 ம் தேதி நள்ளிரவு 12:30 மணியளவில் விபத்து நடந்துள்ளது.
இதையும் படிங்க: மைனர் சிறுமி சடலமாக மீட்பு.. 19 வயது இளைஞர் கைது.. மேற்குவங்கத்தில் பதற்றம்.!